Friday, July 24, 2009

கவிதைகள்...

நேர்படபேசு...

எப்படி மிகச்சரியாக

யூகிக்க முடிகிறது, உங்களால்...


என் பதில்களுக்கான

கேள்விகளை?

என்னால் ஒரு போதும்

யூகிக்க முடிவதில்லை

உங்கள் கேள்விகளுக்கான

பதில்களை!


மார்கழி 6, மாலை 5.40-6.30

மூலவர்,

உற்சவர்,

உடனுறையம்மன்,

பரிவார தெய்வங்கள் ..

தேவதையாய் நீ !

இணைந்து நிகழ்த்தியது


இந்த "தேவகணம்' !


கானல்

அருவியென பொங்குகிறது

உன் நினைவுகளும்,

நினைவுசார் கனவுகளும்...


'விக்கிக்கொண்டே இருக்கிறது மனம் !'

அள்ளி பருகவா முடியும்

கானலின் அருவியை...
Share/Bookmark