Sunday, September 20, 2009

சாத்தியம்




அடுக்குமாடி குடியிருப்புகள்
சாத்தியப்படுத்தியது
கோலங்களற்ற விடியல்களை...


தொலைக்காட்சிபெட்டிகள்
சாத்தியப்படுத்தியது
கொண்டாட்டங்களற்ற பண்டிகைகளை...


கடன்அட்டைகள்
சாத்தியப்படுத்தியது
பேரங்களற்ற வியாபாரங்களை...


கணிப்பொறி விளையாட்டுக்கள்
சாத்தியப்படுத்தியது
பலூன்காரன் வராத தெருக்களை...


கைப்பேசிகள்
சாத்தியப்படுத்தியது
முகங்கள் அறியாத காதல்களை...


இணையங்கள்
சாத்தியப்படுத்தியது
சுவர்களற்ற படுக்கையறைகளை...


"ஏதோவொரு" தொழில்நுட்பம்
சாத்தியப்படுத்தும்
மனிதமற்ற மனிதர்களை...

Share/Bookmark

4 comments:

ச.பிரேம்குமார் said...

அரசு, ஏற்கனவே மனிதம் உள்ள மனிதர்களை காண்பது அரிதாகத்தானே இருக்கிறது. இனி புது தொழிற்நுட்பம் வேறு வர வேண்டுமா என்ன?

நல்ல பதிவு. வாழ்த்துகள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி பிரேம்..

திகழ் said...

உண்மை தான் நண்பரே

வாழ்த்துகள்

அர்ஜுன் எ வேதாளம் said...

மிகவும் சிறப்பாக இருக்கிறது. நன்றி

Post a Comment