
நினைவுகளின் நீர்த்துளிகளால்
ஆனது நம் காதல்நதி...!
கட்டற்று, கரைகளற்று
பாயும் நின் நினைவலைகளில்
அடித்து செல்லப்படுகிறது
வேர்களற்ற எனதுயிர்.
ஆனது நம் காதல்நதி...!
கட்டற்று, கரைகளற்று
பாயும் நின் நினைவலைகளில்
அடித்து செல்லப்படுகிறது
வேர்களற்ற எனதுயிர்.
உன் நினைவுச்சிதறல்களை
சேகரித்து செய்தேன்
ஒரு 'கலைடாஸ்கோப்'..
சொற்களின் வெப்பத்தில்
இயல்பாய் நிகழ்ந்தது
நினைவுகளின் பிரிகை
நிஜத்தின் நீட்சியாய்
கருப்பு,வெள்ளை பிம்பங்கள்.
முடிந்திருந்த
இந்த வேட்டையிலும்
பலி எனது உயிர்தான்..
தப்பிப்பிழைத்தல்
சாத்தியமாவதேயில்லை,
"வலியது"தான் உன் நினைவுகள்.

3 comments:
// கட்டற்று, கரைகளற்று
பாயும் நின் நினைவலைகளில் //
உண்மை.. நினைவுகளுக்குத் தடை போட முடிவதேயில்லை..
ஆம் வலியவைதான் நினைவுகள்
அறத்துக்கு புறம்பில்லாத வாழ்க்கையே,,,,உங்கள் உள்ளம் எழுத்தில் தெரிந்தது.
Post a Comment