Thursday, February 18, 2010

பறவைகளின் கதறல்


சந்தத்தை இழந்த
பறவைகளின் சத்தம்
'கையறு' கதறலாகவே இருக்கும்.


ச்சைகிளிகள் தான்
கற்றுத்தந்து மரங்களின் பாஷையை,
மரங்களிடம் பேசும்போதெல்லாம்
செல்லமாய் முறைக்கின்றன
பச்சைக்கிளிகள்.

ல்லவேளை..
மரத்தடியில் அமர்ந்து
கவிதை படித்தேன்,
அர்த்தம் விளங்கா(த)
"ஆகச் சிறந்த கவிதை"க்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லியது
ஒற்றை 'தேன்சிட்டி'ன் சத்தம்.


Share/Bookmark

6 comments:

க.பாலாசி said...

படமும் கவிதையும் மனதைக் கவர்ந்தது... தொடருங்கள்...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி பாலாசி..

த‌மிழ் said...

// அர்த்தம் விளங்கா(த)
"ஆகச் சிறந்த கவிதை"க்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லியது
ஒற்றை 'தேன்சிட்டி'ன் சத்தம். //

நல்ல வரிகள்..

Anonymous said...

remba nantru

அருவி said...

மிகவும் நல்ல செய்யுள். படிக்க படிக்க சுவையாகதான் உள்ளது

Unknown said...

Its Really too good

Post a Comment