Tuesday, March 2, 2010

முடிவிலா பிரியங்கள்


உன்னை எதிர்கொள்வது கடினம்,
அதைவிட கடினம்
உன் புன்னகையில் உதிரும்
பிரியங்களை எதிர்கொள்வது..!

நிறை கொள்ள இயலாமல்
ததும்பி, நுரைத்து வழியும்
பிரியத்தில் சிறிதை எடுத்து
ரகசிய சொற்களாக்கி
குழந்தை ஒன்றிடம் சொல்லி வைத்தேன்
மொழி பழகா அக்குழந்தை, பிரிய சொற்களை
மழலையாக்கி உளறித் திரிந்தது
மழலையின் உளறலில் இரட்டிப்பான
பிரியத்தை எல்லாம் பனித்துகள்களாக்கி
மேகங்களுக்குள் மறைத்து வைத்தேன்
தனிமையின் மோகக் குளிரை
தாங்காத பிரிய மேகங்கள்
மழையாய் பொழிந்து, மனம் நனைத்தது
மனம் நடுங்க பொழிந்த மழையில்
சிறிதை கைகளில் ஏந்தி
தோட்டத்து செடிக்கு நீர் வார்த்தேன்
பிரியங்களில் செழித்த ரோஜாச்செடி
பிரியங்களை எல்லாம்
மொட்டுகளாக்கி பூத்து சிரித்தது
சிரித்த பூக்களில் சிறந்ததை பறித்து
உன்னிடம் தந்தேன்,
நாணத்துடன் பூவை
பெற்றுக்கொண்ட நீ உதிர்த்தாய்,
மற்றுமொரு புன்னகையை...

உன்னை எதிர்கொள்வது கடினம்,
அதைவிட கடினம்
உன் புன்னகையில் உதிரும்
பிரியங்களை எதிர்கொள்வது..!

Share/Bookmark

7 comments:

Sivaji Sankar said...

:)

த‌மிழ் said...

Excellent Thiru!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

ம்ம்,, போலாம் போலாம், இன்னைக்கு படத்தை பார்த்துட்டு இன்னும் எத்தனை கவிதை பிறக்கப்போகிறதோ?

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சிவாஜி,
நன்றி தமிழ்..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி...கவிதை வர்ற அளவுக்கு படம் இருந்த நல்லதுதான்..
பார்ப்போம்.

A.சிவசங்கர் said...

வாவ் நீங்க காதலிக்கிரிங்களா

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@A.சிவசங்கர்,
//வாவ் நீங்க காதலிக்கிரிங்களா//

சிவா...வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க..
இனிமேல்தான்......காதலிக்கணும்...

Post a Comment