Saturday, March 20, 2010

கடைசி சந்திப்பு



கண்ணீரின் சிலுவையில்
சொற்களை ஏற்றிவிட்டு
நமக்கிடையே அமர்ந்திருந்தது மௌனம்

உதடுகள் பயனற்று
போயிருந்த இத்தருணத்தில்
மனதிலிருந்து கசியும்
நேசம் வளர்த்த பிரிய சொற்கள்
காற்றில் கலந்து தவிக்கின்றன
குற்றுயிரும், குலையுயிருமாய்...
முன்பொரு முறை
நிழலாய் நம்மை தொடர்ந்திருந்த
மௌனத்தை நம்மிடமிருந்து
உடைத்து, அழித்தது
ஊற்று நீரென பெருகிய
இதே பிரிய சொற்கள்தான்.

காலத்தின் சுழற்சியில்
இது மௌனத்தின் தருணம்
கண்ணீரின் சிலுவையில்
சொற்களை ஏற்றிவிட்டு
நமக்கிடையே அமர்ந்திருந்தது
குரூர மௌனம்.



Share/Bookmark

7 comments:

sakthi said...

கையாள்வதில் கவனம் இல்லாவிட்டால், காலம் பூமராங் மாதிரி. கொஞ்சம் பிசகினாலும் திருப்பி தாக்கும்.

Madurai Saravanan said...

அருமையாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

பாலா said...

அருமை அன்பரே
மௌனம் இருமுனை கூர் கத்தி
சிலசமங்களில் அதுவே மருந்தும் கூட

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Thanks sakthi..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Thanks saravanan,& bala..

முரளிகுமார் பத்மநாபன் said...

திரு, அருமை. தொடருங்கள்.

தமிழ் said...

//நேசம் வளர்த்த பிரிய சொற்கள்//

i like dis words..

Post a Comment