Wednesday, March 31, 2010

நீங்கெல்லாம் எப்படா திருந்துவீங்க...?


ரசிகர்களை விட விமர்சகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இளையதளபதியின் அடுத்த படமான "சுறா" படத்தின் பாடல்கள் வெளிவந்துவிட்டது. விமர்சகர்களை ஏமாற்றாமல் படத்தின் பாடல்களும் "வழக்கமான பாணி"யிலேயே உள்ளது. பல பாடல்கள் "தமிழ்ப்பட"த்தின் பாடல்களுக்கு போட்டியாக(..?) உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் ஒரு வரி
"இவனை தீண்ட நினைத்தால்,...இரும்புக்கையால் அழிப்பான்... இருளைப் போக்க இவனே , விளக்கை போல் வருவான்.. தர்மம் காக்க என்றும் தன்னைத் தானே தருவான்.. அதர்மம் அழிக்க இவனே ஆயுதமாகிடுவான்"..
எப்படியோ மறுபடியும் ஒரு அடிமை சிக்கிடுச்சு...
There are more bad musicians than there is bad music.


இந்திய மாநிலங்களில் அதிக சாலை விபத்துக்கள் நிகழும் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இதேபோன்றதொரு சந்திப்பில் தமிழக முதல்வர் "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சாலைகளின் தரம் நன்றாக உள்ளது, இதனாலேய சாலை விபத்துக்கள் அதிகரிக்கின்றன " என்று விபத்துகள் குறித்து கூறியிருந்தார். எல்லா பிரச்சனைகளுக்கும் முதல்வர் கருத்து சொல்லலாம் அதுக்காக இப்படியா..?
It is dangerous to be right when the government is wrong.


வழக்கம் போல "பென்னாகரம்" இடைத்தேர்தலிலும் ஆளும்கட்சியே வெற்றிபெற்றது. இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்கட்சிகளே ஒரு முடிவிற்கு வந்துவிடும் இன்றைய சூழலிலும் பலர் தங்களது வேலைகளை ஒதுக்கிவைத்து விட்டு தொலைக்காட்சிகள் முன்பும், இணையங்கள் முன்பும் தவமிருக்கின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஊரில் உள்ள வாக்காளர்கள் அனைத்து கட்சியினாராலும் 'கவனிக்க'படுவதையும் தாண்டி இம்முறை வெளியூர்களில் வசித்த 'பென்னாகரம்' தொகுதி வாக்காளர்கள் அந்தந்த ஊர்களிலேயே 'கவனித்து' சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களும் பல கெடுபிடிகளையும் மீறி 84 சதவீத வாக்குகளை தந்து தங்கள் ஜனநாயக கடமையைஆற்றினர்.
Democracy is the recurrent suspicion that more than half of the people are right more than half of the time.


ஐதராபாத் நகரில் இரு தினங்களுக்கு முன் கொடிக்கம்பம் நடுவதில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. கலவரக்காரர்களால் அரசின் பல்வேறு சொத்துக்கள் சூறையாடப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக கலவரம் கட்டுபடுத்தபடாமல் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிவருகிறது.
எளிமையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் அரசியல்வாதிகளின் தலையீடு மற்றும் தவறான வழிகாட்டுதலால் பெரும் கலவரமாக்கபட்டுள்ளது.
“The cause of violence is not ignorance. It is self-interest. Only reverance can restrain violence - reverance for human life and the environment.”Share/Bookmark

2 comments:

Sindhan R said...

இந்த உலகத்துல நாலும் இருக்கும் ... நாமதான் திருந்தி அத புறிஞ்சு நடந்துக்கனும் ...

என்ன நான் சொல்லறது?

karges said...

தம்பி... நீங்க சொன்னது ரைட்டு தான்... ஏப்ரல் மொதல் தேதிங்றதுனால... april fool லாம் பன்னலல்ல..? ஆமா விஜய் படத்துகெல்லாம்.. blog எழுதி.... என்னதிது? பாவம்... கூகிள் சர்வருக்கு புடிச்ச கேடு... அவர்தான் பேச்சுக்கு கூட நல்ல படம் பன்றதில்லனு கங்கனம் கட்டிட்டு திரியறாரே... நாம என்ன பன்றது...?

Post a Comment