Friday, April 9, 2010

துணை


தேசிய நெடுஞ்சாலை எண் 174ல்
ஒவ்வொரு நெடும் பயணமும்,
பாதை கருப்பராயனை
வணங்கியே துவங்கும்.

சக்கரங்களுக்கு எலுமிச்சை,

திருஷ்டி கழிக்க சூடம், தேங்காய்...

பாதைக் கருப்பனும்,

தங்கய்யா பூசாரியின் திருநீறும்

நெடும் பயணத்திற்கு துணை.

வாகனங்களில் வாழ்வை

எதிர்நோக்கி காத்திருக்கும்

தேங்காய் கடை பாட்டிக்கு

பூசைக்கு நிறுத்தும்
வாகன ஓட்டிகளே துணை.



டிஸ்கி : தேசிய நெடுஞ்சாலை எண் 174 - திருப்பூர் to மதுரை தேசிய நெடுஞ்சாலை.
Share/Bookmark

4 comments:

ஜெகதீஸ்வரன் said...

அருமை...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜெகதீஷ்..

திகழ் said...

அருமை

ராதை said...

நல்ல கவிதை!

Post a Comment