Tuesday, April 13, 2010

மாயவேர்கள்

விதையொன்றின் மரிப்பில்
துவங்கிய வேர்களின் தேடல்
அரூப சித்திரங்களை
எழுதியபடி மண்ணுள் நீள்கிறது

வியர்த்து மண்ணுள் புகுவதும்,
மிதந்து நீரினில் அலைவதும்,
வீழ்தல் பயமின்றி கிளர்ந்து
விருட்சம் வளர்வதற்கே

முடிவுறா நெடும்பயணத்தை
துவக்கும் விதையின் மரணம்,
யுகங்கள் கடந்தும்
நிகழ்த்துகிறது உயிர்த்தெழுதலை...

Share/Bookmark

3 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தமிழ் said...

//வீழ்தல் பயமின்றி கிளர்ந்து
விருட்சம் வளர்வதற்கே//

any lines or words missing in between these lines?.. cant understand..

Post a Comment