Monday, July 26, 2010

இழப்பு


உன்னை காதலித்து
நான் தோற்றதில்,
உனக்கு ஈடு செய்யவியலா
இழப்பொன்றும் நேரவில்லை
என்னை இழந்ததை தவிர,
எனக்கும் இழப்பொன்றும்
பெரிதில்லை
என்னை இழந்ததை தவிர
Share/Bookmark

8 comments:

raman- Pages said...

நா.மகுடேஸ்வரன். சந்திப்பின் பாதிப்பா.

raman- Pages said...

ha.. me the firsta??,

ஆதவா said...

நல்ல கவிதைங்க... ஒரே வார்த்தையை இரண்டு கோணங்களுக்கும் பொருந்த சொல்லியிருக்கிறீர்கள்..

இழப்பு யாருக்கும் பெரிதாக இல்லைதான்//
காதல் அநாதையாக உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது
இருவரின் இழப்பிலும் தெரியவில்லை போலும்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@#ஆதவா..
//இழப்பு யாருக்கும் பெரிதாக இல்லைதான்..
காதல் அநாதையாக உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது
இருவரின் இழப்பிலும் தெரியவில்லை போலும்//

//எனக்கும் இழப்பொன்றும்
பெரிதில்லை
என்னை இழந்ததை தவிர//

காதலுக்காக தன்னையே இழப்பது சுயத்தை இழப்பது போன்றது.காதலுக்காக இழப்பதற்கு சுயத்தைவிட பெரிதாக ஏதும் உள்ளதா?

பரிசல்காரன் said...

இழப்பு இங்கே சிறப்பாய் வெளிப்பட்டிருக்கிறது, இன்னும் எழுதுங்கள் - நிறைய..

ஆதவா said...

காதலுக்காக தன்னையே இழப்பது சுயத்தை இழப்பது போன்றது.காதலுக்காக இழப்பதற்கு சுயத்தைவிட பெரிதாக ஏதும் உள்ளதா?

சுயம் திரும்பவும் பெறப்படும்.... இறந்த காதல் மீளாதே?

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@ஆதவா..//சுயம் திரும்பவும் பெறப்படும்.... இறந்த காதல் மீளாதே?//

காதல் இறப்பதில்லை..சிறு இடைவெளிக்கு பிறகு மேலும் மூர்க்கமாக வளரத்துவங்கும் வேறுறொரு கிளையை பற்றிக்கொண்டு..சுயம் நசிந்து மீண்டும் உயிர்க்கும் போது இது நிதர்சனம்.

நன்றி ராம்..
நன்றி ஆதவா..
நன்றி பரிசல் அண்ணா..

முரளிகுமார் பத்மநாபன் said...

very good serthalam kalai kattukirathu, enna innum thalaya kanaaame....?

Post a Comment