Monday, August 9, 2010

பால்யத்தின் வண்ணம்




பால்ய வயதுகளில் தொலைத்த
சில வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி
நகராத மலையொன்றில்,
நகர்ந்திறங்கும் மாலையில்
அலைந்து திரிந்தேன்.

மாலை நேரத்து
இறங்கு வெயிலோடு சில
மழைத்துளிகளும் சேர்ந்திறங்கின.

வெயிலை சுவாசித்து
களைத்திருந்த நாசிகளுக்குள்
செம்புழுதியின் வாசம் நிரம்பியது.

பால்யத்தின் வாசத்தை
உணர்த்திய மழைத்துளிகள்
தன் வண்ணங்களை
வில்களாக்கி காற்றில் நிறுத்தியது

காற்றில் பறக்கும்
சிறு,சிறு வானவில்களைத்
தேடி அலைந்த என் மீது
பறக்காத பெரும்
வண்ணத்துப்பூச்சியொன்று,
தன் வண்ணங்களை
மழையாய் பொழிந்தது,
வண்ணங்களில் நனைந்து
நெகிழ்ந்திருந்த என்னருகில்
பறந்து வந்தமர்ந்தது
வண்ணத்துப்பூச்சியொன்று...
அது,
பால்யத்தில் நான் பிடித்து
மீண்டும் பறக்கவிட்ட
வண்ணத்துப்பூச்சியொன்றின்
சாயலில் இருந்தது.
Share/Bookmark

4 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்று

தமிழ் said...

நல்ல படிமம்!

சைக்கிள் said...

//நகராத மலையொன்றில்,
நகர்ந்திறங்கும் மாலையில்//
அழகான படிமம். வானவில் வண்ணத்துப்பூச்சியாகும் metamorphosis வரிகளில் இருந்து விழிக்குப் போகிறது. பிரகாசமான வரிகள். நன்றி.

ஜோதிஜி said...

ஜெயிக்க வாழ்த்துகள்

Post a Comment