Friday, August 20, 2010

கடவுளர் உற்பத்திக்கூடம்




முதன்முதலில் இங்கு வந்தது
தாத்தாவின் கைபிடித்து..
சிறு தெய்வங்களை புறந்தள்ளி
ஆரியக்கடவுளர் முன்னின்று
ஓங்கி உலகளக்க,
திருஷ்டியிலிருந்து காக்கும்
பூத கணங்களில் துவங்கி,
முச்செல்வங்களருளும்
கடவுளர்கள் அனைவரும்
மத பேதங்களின்றி
உருவாவது இங்குதான்..

அப்பாவின் காலத்தில்
ரட்சிக்கும் பணிக்கென
திராவிடக்கடவுள்களே
அதிகம் படைக்கப்பட்டனர்

என் காலத்திலோ
கடவுளர்களை பின்தள்ளி
மக்களை ரட்சித்தனர்,
சில அவதாரக் கடவுளர்கள்..

ஆரியமும், திராவிடமும்
ஒருபுறமிருந்து உலகை ரட்சிக்க,
தலைமுறைகள் பல கண்ட
" கந்தன் பிரேம் ஒர்க்ஸ்" ல்
எல்லாக் காலங்களிலும்
தவறாமல் படைக்கப்படுகிறது
'என்னைப் பார் யோகம் வரும் '
வாசகம் தாங்கிய கழுதையின் படம்.
Share/Bookmark

4 comments:

raman- Pages said...

கவிதை..???? நல்லா இருக்குங்க.. கழுதைய கவிதையாக்குனது.. ஹிஹ்ஹி

☼ வெயிலான் said...

என்னது? கவிதைய கழுதையாக்கியிருக்காரா?

☼ வெயிலான் said...

நல்லாருக்கு திரு!

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க திரு. என்னச்சொல்றது இதுதான் உண்மை... அந்தக்கடை வாசலிலும் ‘என்னைப்பார் யோகம் வரும்’ என்ற வாசகத்துடன் இருகழுதைகள் சிரித்துக்கொண்டிருக்கும்...

Post a Comment