Friday, October 8, 2010

காலச்சமர்



நகர மறுக்கின்றன,
சங்கிலியால் கட்டப்பட்ட
என் நாட்கள்...

பிணைக்கப்பட்ட கால்களுடன்
தடுமாறி விழும் என் நாட்களை
காயப்படுத்திய படியே
முன்னோக்கி நகர எத்தனிக்கிறது
நினைவுகள்,

நாட்களுக்கும்,
நினைவுகளுக்குமான
இச்சமரில், தோற்று வீழும்
தன்னில் சிறு துளியான
என் நாட்களைப் பற்றிய
கவலைகள் ஏதுமின்றி
கடந்து செல்கிறது காலம்.




Share/Bookmark

11 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லா இருக்கு திரு, தொடருங்கள்....

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் கொஞ்ச நாள் பாம்பே பக்கம் போயிட்டேன்னு எல்லாரும் கவிதையா எழுதுறிங்களா? இருங்க வரேன் நானும், இன்னும் ஒரு வாரத்துல திரும்பிடுவேன், நானும் கிறுக்கலுக்கு...
:-))

க.மு.சுரேஷ் said...
This comment has been removed by the author.
க.மு.சுரேஷ் said...

//நகர மறுக்கின்றன,
சங்கிலியால் கட்டப்பட்ட
என் நாட்கள்...//

உன் கவிதைக்காக காத்திருக்கிறாது போலும்.

கவிதை அருமை.

வாழ்த்துக்கள்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@ முரளி...
நன்றி முரளி, நாங்களும் கிறுக்கல்களை எதிர்பார்க்கிறோம்.

@ சுரேஷ்...
நன்றி சுரேஷ்

Vel Kannan said...

நல்லா இருக்கு

santhanakrishnan said...

காலத்துடன் சமர் செய்வதைவிட
சமரசம் செய்து கொள்வது
செளகர்யமாய் இருக்கிறது.
கவிதை நன்று.

kutipaiya said...

//தன்னில் சிறு துளியான
என் நாட்களைப் பற்றிய
கவலைகள் ஏதுமின்றி
கடந்து செல்கிறது காலம்//

very true!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி வேல்கண்ணன்,
நன்றி சந்தானகிருஷ்ணன்
நன்றி சீதா...

சைக்கிள் said...

சில விஷயங்களை உணர மட்டுமே முடியும்.அப்படி ஒன்றை அழகாக சொல்கிறது கவிதை. பாராட்டுக்கள்

ஆதவா said...

காலத்தின் ஒரு வடிவம் தான் நாட்கள்.
அதனாலேயே இறுதி வரி எனக்கு சரிவர படிக்க முடியவில்லை. அதேபோல கடைசி பாரா

நாட்களுக்கும்,
நினைவுகளுக்குமான
இச்சமரில்,
கவலைகள் ஏதுமின்றி
கடந்து செல்கிறது XXX

என்று கத்திரி போட்டிருக்கலாம் என்பது என் கருத்து. (இதற்கு மாற்று கருத்தும் இருக்கலாம்)

சங்கிலியால் கட்டி தடுமாறி நடக்கும் நாட்கள், எனும் படிமம் வித்தியாசமானது. இது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வைக் கொடுத்திருக்கும். (திருப்பூரில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் ) குப்பைக்கூளங்களில் வாழும் மனிதனுக்கும் பனியன் தொழிலில் மெர்சண்டைசருக்கும் உள்ள பெரிய வித்தியாசமே நாட்கள் எப்படி ease ஆகச் செல்லுகிறது என்பதுதான்.

நாட்களின் வாயிலாக நினைவுகளைப் பெறுகிறோம். நாட்கள் தாயானால் நினைவுகள் சேயாகும். இருவருக்குமிடையிலான மோதல்... (சரி சரி, ரொம்ப ஓவரா போறேன்...)

கவிதைக்கு வாழ்த்துக்கள்!!
(இன்னிக்கு உங்களைப் பார்த்தவுடனே நம்ம மக்களோட தளத்தை விசிட் பண்ணனும்னு தோணிச்சு.. நன்றிங்க.)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@ சைக்கிள்,
நன்றி சைக்கிள்...
@ ஆதவா,
கருத்திற்கு நன்றி ஆதவா..
// காலத்தின் ஒரு வடிவம் தான் நாட்கள்.
அதனாலேயே இறுதி வரி எனக்கு சரிவர படிக்க முடியவில்லை//
காலத்தின் ஒரு வடிவம் தான் நாட்கள்..உண்மைதான் இதைக்குறிக்கும் வகையில்தான் " தன்னில் சிறு துளியான " என்ற வரி அமைந்துள்ளது.

Post a Comment