Sunday, October 10, 2010

நிலையாமை


அகாலமாய் மரணித்த
சிறுவனின் தலைமாட்டில்
வைக்கப்படுகின்றன
சில ஊதுபத்திகள்..

நாளை மீதான நம்பிக்கைகள்
கொடுங்கனவாய் மாறி,
இன்றை சிதைக்கின்றன..

புகைந்துதிரும்
பத்தியின் மணம்
அறையெங்கும் வியாபிக்கிறது
நிலையாமையின்
மௌன சாட்சியாய்.




Share/Bookmark

8 comments:

எஸ்.கே said...

அருமையான வரிகள்!

இளங்கோ said...

புகைந்துதிரும் - புகைந்திடும் ?
அழகான வரிகள்.

தமிழ் said...

ம்ம்.. நிலையற்ற வாழ்வு !

மேலெழும் புகையின் வடிவைக் கவனித்தீர்களா திரு?

santhanakrishnan said...

மனித வாழ்வு புகை போல்
கலைந்த் விடுகிறதென
மிகச் சரியாகச் சொன்னீர்கள் திருநா.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி எஸ்.கே,
நன்றி இளங்கோ,
நன்றி சந்தானகிருஷ்ணன்,

@தமிழ்,
புகையின் வடிவம் 'கிராபிக்ஸ்' என நினைக்கிறேன்.

க.மு.சுரேஷ் said...

//நிலையாமையின்
மௌன சாட்சியாய்.//

அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்...
திரு..

sivaaa82 said...

அது நிலையாமைதானா..அல்லது ஏதாவது ஒரு வடிவத்தில் அந்த ஊதுபத்தி இந்த பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுகிறதா....

ஆதவா said...

நல்லா இருக்குங்க.

புகை, நிலையாமையின் மிகச்சரியான குறியீடுதான்.
ஒவ்வொருவரின் இறப்பிற்குப் பிறகும் நாளைய நம்பிக்கைகள் கைவிட்டுப் போகின்றன.

அழகா இருக்கு கவிதை!

Post a Comment