Wednesday, November 10, 2010

முத்தக்கதை 2


கன்னங்களில் தேங்கும்
என் முத்தங்கள் ததும்புகின்றன
உன் இதழ்களில்

கண்மூடித் தனமானவைதான்
என் முத்தங்கள்
கண் மூடியேனும் பெற்றுக்கொள்

பறத்தலின் சாத்தியங்கள்
சிறகுகளில் மட்டுமில்லை
உன் முத்தங்களிலும்தான்

வீழ்த்தும் போதும்
வீழ்த்தப்படும் போதும்
முத்தங்களே துணை

பொறுமையின் மேகங்களுடைத்து
பொழிந்ததுன் முத்தங்கள்
குளிர்ந்ததென் பூமி

முத்தங்களின் மோனத் தவத்தில்
கணங்கள் உறைகின்றது
காதல் உருகுகிறது
Share/Bookmark

9 comments:

சு.சிவக்குமார். said...

ஒ...திரு...இந்த பரிவர்த்தனையிலும் உங்களுக்கு நல்ல தேர்ச்சி இருக்கிறது போல...சிறந்த கொடுக்கல்,வாங்கல்...

எஸ்.கே said...

அழகான கவிதை! வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

@ சிவக்குமார்
இன்னும் அனுபவம் பத்தாது சிவா
@ எஸ்.கே
நன்றி எஸ்.கே

ஜோதிஜி said...

இருங்க நீங்க கொடுத்த தாக்கத்தை செயலில் காட்டி விட்டு வருகின்றேன்.

க.மு.சுரேஷ் said...

//பொறுமையின் மேகங்களுடைத்து
பொழிந்ததுன் முத்தங்கள்
குளிர்ந்ததென் பூமி//

முத்தயுத்ததில் தோற்றாலும் சுகம்.
அருமையான வ்ரிகள்..
வாழ்த்துக்கள்..

kutipaiya said...

//பறத்தலின் சாத்தியங்கள்
சிறகுகளில் மட்டுமில்லை
உன் முத்தங்களிலும்தான்//

லவ்லி!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜோதிஜி
நன்றி சுரேஷ்
நன்றி சீதா

ஆதவா said...

வெகு அழகு!!
முத்தம் என்று வரும்பொழுது எல்லா கவிஞர்களும் தனது மொத்த கனவுகளையும் எழுத்துக்குள் புதைத்துக் கொள்கிறார்களே!!
அந்த கடைசிவரி என்னை வெகுவாகக் கவர்ந்தது

"தாரிஸன் " said...

//பறத்தலின் சாத்தியங்கள்
சிறகுகளில் மட்டுமில்லை
உன் முத்தங்களிலும்தான்//

எப்படித்தான் வருதோ....

Post a Comment