Saturday, November 13, 2010

பூதத்தலைவி






அள்ளி ஏந்திய கைகளுக்குள்
தேங்காத மழை,
சுழிந்து ஓடுகிறது மகாநதியாய்

மனங்கொண்டு கடந்தாலும்
நீள்கிறது பூமி,
முடிவிலாப் பாதையென

முத்தங்கள் கொண்டு தணித்தாலும்
காதல் நெருப்பாய்,
பற்றியெரிகிறது மோகம்

இறுக்கிப்பிடித்த கைகளிலிருந்தும்
நழுவுகிறது காற்று,
நிறுத்தவியலா காலமென

இமைகள் மூடிப் பிடித்தாலும்
வசப்படாத வானம்,
விரிகிறது பெரும் காட்சியென

என் உதிரங் கொண்டு பூசித்தாலும்
சினந்தணியா நீ ,,
ஆட்கொள்கிறாய் மகா ஜனனியாய்...


Share/Bookmark

7 comments:

க.மு.சுரேஷ் said...

//இமைகள் மூடிப் பிடித்தாலும்
வசப்படாத வானம்,
விரிகிறது பெரும் காட்சியென//


என்ன அருமையான கற்பனை வரிகள் ...

அனைத்து வரிகளும் அருமை

வழ்த்துக்கள்...

தமிழ் said...

fantastic thiru!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சுரேஷ்..
நன்றி தமிழ்..

Nithyaswarna said...

very nice

திருநாவுக்கரசு பழனிசாமி said...

thanx nithya

kutipaiya said...

லவ்லி!

ஆதவா said...

வரிகள் எல்லாமே கலக்கல்!!! ரொம்பவும் அற்புதமாக இருக்கிறது....
குறிப்பாக முதல் வரி.............. விரிந்த சிந்தனை!!
வாழ்த்துக்கள் நண்பரே

Post a Comment