Tuesday, November 16, 2010

திறக்காத கதவுகள்



மறைத்து வைக்கப்பட்ட
உன் புகைப்படத்துடன்
சேர்த்தே மறைத்து வைக்கப்பட்டது
என் பிரியங்களின் சில கதவுகள்..

வீட்டை சுத்தப்படுத் வரும்
பண்டிகைக்காலங்கள் ஒவ்வொன்றிலும்
மனம் பதைபதைக்கிறது
முன்பு மனைவியை எண்ணியும்
இப்போது பிள்ளைகளிடமும்

திறக்கப்பாடாத கதவுகளுக்குள்
பாழடைந்து போயிருக்கும்
என் பிரியங்களுக்கும் வரலாம்
ஏதேனும் ஒரு பண்டிகை,
அதற்குள் தெரிந்து கொள்ள வேண்டும்
அவர்களுக்குள்ளும் திறக்காத கதவுகள்
ஏதேனும் உண்டா என்று..


Share/Bookmark

17 comments:

kutipaiya said...

ஒரு மனிதனுக்குள் தான் எத்தனை திறக்காத கவிதைகள்!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

திறக்காத கவிதைகள்தான் தேடலை தொடர்ந்து நிகழ்த்துகிறது. நன்றி சீதா..

சு.சிவக்குமார். said...

திறக்காதவற்றின் மீதான பிரமைகள் கவிஞனுக்கு தீர்வதே இல்லை போலும்....

//திறக்கப்பாடாத கதவுகளுக்குள்
பாழடைந்து போயிருக்கும்
என் பிரியங்களுக்கும் வரலாம்
ஏதேனும் ஒரு பண்டிகை//

இதற்காகத்தானோ எல்லாப் பண்டிகைகளும்......

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப நல்லாருக்கு

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சிவா..
நன்றி சதீஷ்குமார்

ஜோதிஜி said...

அட நம்ம கதை போலவே இருக்கே.

வெண் புரவி said...

அப்படியே நினைவுகளை பின்னோக்கி செலுத்தவைது விட்டீர்கள்...

அருமையான கவிதை

paarkkadal sakthi said...

mmhhhmmmm

santhanakrishnan said...

புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு
குட்டி போட்டதாவென யாருக்கும்
தெரியாமல் புத்தகத்தைத் திறந்து
பார்க்கும் குழந்தையைப் போல்
எல்லோருக்கும் ஒரு ரகசியம்
தேவையாயிருக்கிறது அவ்வப்போது
நினைத்துப் பார்த்துக் கொள்வதற்கு.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜோதிஜி,
நன்றி வெண்புரவி,
நன்றி சக்தி,
நன்றி சந்தானகிருஷ்ணன்

சுந்தர்ஜி said...

//தூரிகையால் சிறைபட்ட யானை உலவுகிறது, கற்பனைக் காடுகளில்..//

இந்த அற்புதமான வரிகளை சைக்கிளின் தளத்தில் படித்தபோதே வர நினைத்து இன்றுதான் வர முடிகிறது.

அடுத்து நல்ல அமைதியான நிறத் தேர்வும் வடிவமைப்பும்.பாராட்டுக்கள் திருநாவுக்கரசு பழனிச்சாமி.

ரகசியத்தின் நெடி பொதிந்த மூடப்பட்ட கதவுகள் உங்கள் மொழியில் அற்புதமாயிருக்கிறது.

தொடர்ந்து வாசித்து மகிழ்வேன்.

நிறையவும் நிறைவாகவும் எழுத வாழ்த்துக்கள் தி.ப.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வருகைக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி சுந்தர்ஜி..நானும் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.பல நல்ல தளங்கள் உங்கள் தளம் மூலம்தான் அறிமுகமாகியது நன்றி.

சைக்கிள் said...

//பிரியங்களின் சில கதவுகள்//
//என் பிரியங்களுக்கும் வரலாம்
ஏதேனும் ஒரு பண்டிகை//
அழகான படிமங்கள்.

Harani said...

அன்புள்ள...

மனம் நெகிழ வைத்த கவிதை. உங்களின் கவிதைமொழயில் ஓர் ஆழமும் தனிததுவமும் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Thanks sir..

க.மு.சுரேஷ் said...

//மறைத்து வைக்கப்பட்ட
உன் புகைப்படத்துடன்
சேர்த்தே மறைத்து வைக்கப்பட்டது
என் பிரியங்களின் சில கதவுகள்..//


மிகவும் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்..

ஆதவா said...

சிலபேர் அப்படி தெரிந்து கொள்வதால் பிரச்சனைகளும் ஏற்படுமல்லவா.....
கவிதைநாயகன் திறந்த மனதுக்காரனாக இருப்பது நல்லது!!

கவிதை அழகு!!

Post a Comment