Wednesday, November 24, 2010

ஆம், எனது உலகம் முன்பு போல் இல்லை



எனது உலகம் முன்பு போல் இல்லை..

நீ என்னுடன் பேசத் துவங்கிய பிறகு
மழையால் நிரம்பத் துவங்கிய என்னுலகம்,
மண்ணின் வாசனையாலும்
மழைநேரத்து வண்ணங்களாலும்
மழையை வரவேற்று கூத்தாடும்
வண்ண மயிலின் மகிழ்ச்சியாலும்
நிரம்பி வழிகிறது

முன்பு,
தனிமையில் மேற்கொள்ளும்
இலக்கற்ற பயணங்களுக்கு
வழித்துணையாக முடியாத
நீண்ட இரவுகளின் புழுக்கமும்
இணையைப்பிரிந்த தவளைகளின்
"கொல்லொலி"யுமே வாய்த்தது

இன்றோ,,
நிலவும், மழையும் சேர்ந்து
பொழியும் குளுமையுடன்
ஏகாந்தமாய்ப் பாடிச்செல்லும்
இரவுப்பறவைகளின் கீதங்களும்
நிஜங்களாக மாறத்துடிக்கும்
உன் பிரிய நினைவுகளும்
வழித்துணையாய் வாய்க்கிறது

ஆம், எனது உலகம் முன்பு போல் இல்லை





Share/Bookmark

5 comments:

santhanakrishnan said...

ஆம்.
காதல்
நம் உலகத்திற்கு
புது ஒப்பனை
செய்து விடுகிறது.

சுந்தர்ஜி said...

ஒப்பனையைத் துறந்து புது ஒப்பனையைத் தந்துவிடுகிறது படுத்தும் இந்தக் காதல்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சந்தானகிருஷ்ணன்
நன்றி சுந்தர்ஜி

க.மு.சுரேஷ் said...

ஆம், எனது உலகம் தான்,

பாடாய் படுத்தும் இந்த காதல் பயபுள்ளைய எப்படி எல்லாம் நோகடிக்கிறது.

அருமையாக உள்ளது நண்பா..
வாழ்த்துக்கள்..

சைக்கிள் said...

அழகாக உணர்வுகள் சொல்லப்பட்டுள்ள வழி சங்கத்தின் நீட்சி போல் உள்ளது.

Post a Comment