Sunday, December 19, 2010

முத்தக்கதை 3



ரோஜாக்கள் பிடிக்குமென்றாய்
பறித்துக் கொண்டேயிரு,
என் இதழ்களில்..

குழந்தையை போன்றது
உன் முத்தங்கள்,
தடுமாறித்,தடுமாறி விழுகின்றன.

அழுத்தக்காரிதான் நீ..
முதல் பார்வையில் நினைத்தது,
முதல் முத்தத்தில் உறுதியானது.

வழி தவறிய குழந்தையாய்
காற்றில் அலைகின்றன,
நீ நிராகரித்த என் முத்தங்கள்.

இறகால் வருடும் என் முத்தங்கள்
தோற்கின்றன, அலகால்
கொத்தும் உன் முத்தங்களிடம்..

தோல் எரிக்கும் அதிகாலைப்
பனிக்குளிர் முத்தங்கள் நீ தர,
எரிந்து தீர்க்கிறது என் காமம்.


Share/Bookmark

4 comments:

"தாரிஸன் " said...

//அழுத்தக்காரிதான் நீ..
முதல் பார்வையில் நினைத்தது,
முதல் முத்தத்தில் உறுதியானது.//


ம்ம்ம்ம்.....கொன்னுடீங்க சார்......

அனுபவிச்சு எழுதிருகீங்க....

க.மு.சுரேஷ் said...

கவிதை அருமை..

வாழ்த்துக்கள்

ஆதவா said...

சான்ஸே இல்லைங்க... முதல் மூன்று வரிகள் ரொம்ப அருமை!! கடைசி வரி வரைக்கும் தாக்க்கம் இருந்து கொண்டேயிருக்கிறது!!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி தாரிஸன்
நன்றி சுரேஷ்
நன்றி ஆதவா

Post a Comment