Sunday, January 30, 2011

ஹைக்கூ 1 - பூக்களின் ரகசியங்கள்



பனித்துளியில் உறையும்
சூரியன், உருகி வழிகிறது
காலமாய்

சுழிந்தோடும் நதியின் வேகம்
கலைத்து விடுகிறது
கூழாங்கல்லின் தவத்தை

தூரிகையில் சிறைப்பட்ட
யானை உலவுகிறது
கற்பனைக் காடுகளில்

வண்ணத்துப்பூச்சிகள்
எப்படியும் அறிந்துகொள்கின்றன
பூக்களின் ரகசியங்களை

கனவுகளில் ஒளிரும்
நட்சத்திரங்கள் எரிந்து
விழுகின்றன விடியலில்

தனிமையின் பாதையில்
பயணிக்க விடுவதேயில்லை
கூடவே வரும் நிலா


Share/Bookmark

9 comments:

ஜோதிஜி said...

நல்லாயிருக்கு.

சிவகுமாரன் said...

பனித்துளியில் சூரியன், கூழாங்கல்லின் தவம், தூரிகை யானை, பூக்களின் ரகசியம், கனவின் நட்ச்சத்திரம், கூட வரும் நிலா,
ஆகா என்ன அழகான படிமங்கள்.
அடித்து துவம்சம் செய்கிறது உங்கள் கற்பனைக் காடுகளில் தூரிகை அல்ல... எழுத்தெனும் யானை.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜோதிஜி
நன்றி சிவகுமார் அண்ணா உங்கள் புரிதலுக்கு..

சுந்தர்ஜி said...

//தூரிகையில் சிறைப்பட்ட
யானை உலவுகிறது
கற்பனைக் காடுகளில்//

உங்களிடம் என்னைச் சேர்த்ததே இந்த வரிகள்தான் திருநாவுக்கரசு.

இப்போது

//சுழிந்தோடும் நதியின் வேகம்
கலைத்து விடுகிறது
கூழாங்கல்லின் தவத்தை//

என்கிற வரிகளும் சேர்ந்து கொள்கின்றன.

Vel Kannan said...

//சுழிந்தோடும் நதியின் வேகம்
கலைத்து விடுகிறது
கூழாங்கல்லின் தவத்தை//எனக்குள் பல கேள்விகள் எழவைத்த வரிகள் தி.ப

ஆதவா said...

அனைத்தும் நன்றாக இருக்கின்றன.!! குறிப்பாக எனக்கு இறுதி கவிதை ரொம்பவும் பிடித்திருந்தது.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சுந்தர்ஜி
நன்றி வேல்கண்ணன்
நன்றி ஆதவா

இராஜராஜேஸ்வரி said...

வண்ணத்துப்பூச்சிகள்
எப்படியும் அறிந்துகொள்கின்றன
பூக்களின் ரகசியங்களை
வண்ணத்துப்பூச்சி -வயசென்ன ஆச்சு??

test said...

தூரிகையில் சிறைப்பட்ட
யானை உலவுகிறது
கற்பனைக் காடுகளில் என்ன ஒரு அற்புதமான வரி

Post a Comment