Monday, January 10, 2011

முத்தக்கதை 4



மௌனமான உன் முத்தங்கள்
அதிர்ந்து கொண்டேயிருக்கிறது
என் உயிர் முழுவதும்

சீக்கிரம் பெற்றுக்கொள், கடனென
நெஞ்சை அழுத்துகிறது
நீ தந்த முத்தங்கள்

குழந்தைகளைக் கூட முத்தமிடாமல்
தவமிருக்கின்றன என் உதடுகள்
உன் முத்த வரங்களைப் பெற

பித்தேறி அலைகின்றது மனம்
முத்தங்களினால் பிடித்த பித்தை
முத்தங்கள் கொண்டே தணி

முதல் மழையின் தீவிரத்தை
கொண்டிருந்தது முதல் முத்தம்
பொழிந்து தீர்த்தது காதல்

உன் இதழ்களிடம் சொல்வதற்கென்றே
சில ரகசியங்கள் காத்திருக்கின்றன
என் இதழ்களிடம்..


Share/Bookmark

1 comments:

சிவகுமாரன் said...

Wow. Great men think alike.
நானும் என் பதிவில் முத்தங்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன் நண்பா.

\\முதல் மழையின் தீவிரத்தை
கொண்டிருந்தது முதல் முத்தம்
பொழிந்து தீர்த்தது காதல்//

அருமை. இனிக்கிறது.

Post a Comment