Wednesday, January 5, 2011

துளிர்க்கும் நற்றவைகள்



ஊழிப் பெருங்காற்றில்
சுழன்றெரியும் நெருப்பு
ஆழிப் பேரலையெதிர்
நீந்தும் சிறுவள்ளம்
சூறைக் காற்றிற் சாயா
புழுதிகாட்டு ஒற்றைப்பனை
யுகங்கள் கிடந்திறுகிய மண்
முட்டும் சிறுவிதை
வானுயர் மரங்கள் மேவிய
வனம்வாழ் சிறு நெருஞ்சி
கற்பாறை பிளந்து நீர்
உறிஞ்சும் சிறு வேர்
அற்றவைகள் ஆளும் அயனியில்
நாற்றாய் துளிர்க்கும் நற்றவைகள்




Share/Bookmark

11 comments:

sakthistudycentre.blogspot.com said...
This comment has been removed by the author.
dineshkumar said...

கிராமிய மனம் கமழும் உணர்வுள்ள வரிகள்

சுந்தர்ஜி said...

காலங்காலமாகத் தொடரும் இந்தச் சமனற்ற பொருத்தம் காலத்தின் முரணோ?

உரக்கக் கொந்தளிக்கும் அலைகடலின் மொழியை உள்வாங்கிக் கொண்டேன் திருநா.

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துகள், நல்ல கவிதை

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சக்தி
நன்றி தினேஷ்
நன்றி சுந்தர்ஜி
நன்றி முரளி

kartin said...

கற்பாறை பிளந்து நீர்
உறிஞ்சும் சிறு வேர்...

happy new year thiru !!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Thanx karthik

சிவகுமாரன் said...

இணைத்துக் கொள்ளுங்கள்.
உரித்துப் போடும்
திருச்சொல் வரிகள் . .

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சிவக்குமாரன்.

ஆதவா said...

புத்தாண்டு கவிதைங்களா? அருமையான துவக்கம்!!

அயனி என்ற சொல் சரியானதா என்று தெரியவில்லை. கவனிக்கவும்!

குட்டிப்பையா|Kutipaiya said...

புகைக்படமும் கவிதையும் அருமை!

Post a Comment