Thursday, February 10, 2011

பிப்ரவரி டிவிட்ஸ்


காதல் மாதமான பிப்ரவரி மாதத்தில் என் ட்விட்டர் தளத்தில் எழுதப்பட்ட சில "ட்விட்"களை இங்கு தந்துள்ளேன். நண்பர்கள் இனி அரசு1691 இந்த தளத்தையும் தொடரலாம்.

இருளுக்கு பழகிய கண்களைப் போன்று, என் இதயமும் உன் காதலுக்கு பழகிவிட்டது..உன் காதலற்ற கணங்களிலும் துடித்து, துடித்து

ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து விடைபெறும் போதும், மனது
சிந்திக்கத்
துவங்கிவிடுகிறது அடுத்த சந்திப்பிற்கான காரணத்தை


என்னை புறக்கணிப்பதற்கான காரணங்கள் உன்னிடம் நிறைய உள்ளது
உன்னை
இழப்பதற்கான காரணங்கள் என்னிடம் ஒன்றுகூட இல்லை.


உன்னிடமிருந்து விலகிச்செல்ல முயலும் போதுதான் "ஈர்ப்பு விசைதத்துவங்கள்" புரிய துவங்குகிறது.

நீயும், உன் நினைவுகளும் இல்லாமலிருந்தால் நிம்மதியாய் வாழ்வது சாத்தியம், என்ன செய்ய அசாத்தியங்களை முயல்வதுதானே காதல்

கனன்று கொண்டிருக்கும் நெருப்பாய் நான்.. காற்றென நீ வர, பற்றியெரியத் துவங்கியது காதல்

உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் என்"காதல்"தான், கேள்விகளை மட்டுமே பெரிதாக எண்ணும் உன்னிடம் எப்படி புரியவைப்பது என் பதில்களிலுள்ள உண்மையை

ஏதேதோ பொய்யான காரணங்கள் சொல்லி உனை காண வருகிறேன்,எல்லா காரணங்களிலும் பொய்யை கழித்துவிட்டால் என்காதலே மிஞ்சும் என்ற நம்பிக்கையில்

உலகம் கடினங்களாலும், காதலாலும் ஆனது. காதலிப்பதற்கு"உன்னை" தேர்ந்தெடுத்த போது அறிந்து கொண்டது




Share/Bookmark

3 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

:) அனைத்தும் அருமை!!

சிவகுமாரன் said...

\\ஒவ்வொரு முறை உன்னிடமிருந்து விடைபெறும் போதும், மனது
சிந்திக்கத் துவங்கிவிடுகிறது அடுத்த சந்திப்பிற்கான காரணத்தை///

அருமை
காதல் சொட்டுகிறது எல்லா வரிகளிலும்

தமிழ் said...

ஒரு வழியாக பிப்ரவரி 14 கடந்து விட்டது :)

Post a Comment