Sunday, February 20, 2011

முகமூடிகள்


ஒவ்வொரு இரவும்
பகல்களில் அணிந்து
கழட்டி எறியும் முகமூடிகள்
எனைப் பார்த்து பரிகசிக்கின்றன
பகல்கள் பரவாயில்லை,
அன்பு
கருணை
நட்பு
கோபம்
அப்பாவி
முட்டாள்
கீழ்படிதல்
சாமர்த்தியசாலி
என சமயத்திற்கேற்றார் போல்
முகமூடிகள், நல்லவன் எனும்
முகமூடியை அணிவதற்கான
தேவையும் அவ்வப்போது
வருவதுண்டு
இரவுகள்தான் கொடியவை
தகிக்கும் நிஜத்தை தவிர்க்க
கனவுகளையாவது அணிய
பழக வேண்டும்


Share/Bookmark

1 comments:

Vel Kannan said...

//இரவுகள்தான் கொடியவை//
என்று சொல்லிவிட்டு அதன் எதிர் நோக்கில் கவிதை அமைந்திருப்பது அருமை நண்பா

Post a Comment