Tuesday, April 19, 2011

எழுதுவதற்கொன்றுமில்லை


எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை

காதலை எழுதி, எழுதி சலித்து
நேசங்களை தொலைத்தாயிற்று
கான்கிரீட் அறைகளில்
அமர்ந்து கொண்டு இயற்கையை
எழுதுவதென்பது கல்லறைக்குள்
படுத்துக்கொண்டு காற்றை
தேடுவது போலானது.
சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட
காலத்தில் சுதந்திரம்,சமூகம்
பற்றியும் எழுதுதல் முறையன்று.
போகம், ரோகம் என எதுவும்
சுகிக்காமல் வாழ்க்கையை
எழுதி என்ன பயன்?
கண்ணிவெடிகள் புதைந்திருக்கும்
பூமியில் வாழ்வைக் கழித்து
கொண்டிருக்கும் மனிதர்களை
பற்றி என்ன எழுதுவது.

எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை

Share/Bookmark

12 comments:

Vel Kannan said...

அனுபவித்து எழுதி இருக்கிங்க நண்பா
சில காலமாக நானும் இவ்வண்ணமே !

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி அண்ணா..நானும் உங்கள் தளத்திற்கு அவ்வப்போது வந்து திரும்பி கொண்டுதானிருக்கிறேன்

ஜோதிஜி said...

நண்பா நிதானமான வேகம். அருமையான படைப்பு, ஆச்சரியமூட்டும் சிந்தனை. இதே போல் தொடருங்க. மிக்க மகிழ்வாய் வாசித்து என்னை மறந்தேன்.

சு.சிவக்குமார். said...

திரு.இந்த நகர்வு எனக்கு ஏனோ இடறுகிறது..மற்றவை நேரில்...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஜோதிஜி
நன்றி சிவா..நகர்வு தற்காலிகமானதுதான்

முரளிகுமார் பத்மநாபன் said...

:-) திரு, ஒண்ணுமேயில்லன்னுட்டு வண்டிவண்டியா எழுதுவிங்க இல்லையா? முன்,பின், சைடு நவீனத்துவ பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...... :-)

கவிதையும், கருவும் நன்று..
வாழ்த்துகள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி முரளி :-)

மிருணா said...

1.எழுத ஒன்றுமில்லை என்பது பற்றியே இவ்வளவு எழுத முடிவது!!! 2. Nizzim Ezekiel இன் Poet,Lover,Birdwatcher என்ற நல்ல கவிதை ஒன்றிருக்கிறது. இவர்கள் மூவருக்கும் பொருந்தும் காத்திருப்பையும், பிறவற்றையும் பேசும் கவிதை அது. இணையத்தில் பாருங்கள். 3. தவிர வாசித்தல் எவ்வளவு இனிமையானது எழுதுபவருக்கு : )

கோமாளி செல்வா said...

எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ ? உண்மைலேயே ரொம்ப ரசிக்க வைக்கிறீங்க! கொஞ்சம் கொஞ்சமா படிச்சிட்டே வரேன் :-)

உதய் பிரபு said...

இதற்கு பதில் " எழுதுவதற்கொன்றுமில்லை " என்னிடமும் ..!!

cheena (சீனா) said...

அன்பின் திருநாவுக்கரசு பழனிச்சாமி - இயல்பான நடையில் ஒரு கவிதை - எழுதுவதற்கு ஒன்றுமில்லாடஹ் நேரத்தில் கூட எழுத முடியாததைப் பற்றி எழுதியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அறுந்த வாலு said...

மிக அருமை :))

Post a Comment