Tuesday, January 3, 2012

கண்ணாடியின் துயரம்




அப்பாவின் அறையிலிருக்கும்
நிலைக் கண்ணாடிக்கு
என் வீட்டின் வயதிருக்கும்.
உருவேறிய தேக்குமரச் சட்டங்கள்
சூழப்பொருத்திய கல்கண்ணாடி
அப்பா இருந்தவரை ஒவ்வொரு
பண்டிகைக்கும் தவறாது நடக்கும்
எனக்கு எண்ணைக்குளியலும்,
கண்ணாடிக்கு திருநீர்க்குளியலும்
வீட்டின் அனைத்து விழாக்களிலும்
கண்ணாடியும் ஓர் உற்சவமூர்த்தி
வெளியூர் சென்றிருக்கும் காலங்களில்
வீட்டைவிட கண்ணாடியை பிரிந்திருப்பது
பெரிய துக்கம் அப்பாவிற்கு
அப்பா,அம்மா மரணத்திற்கு பிறகு
அவர்களின் நினைவாகிவிட்ட
இந்தக்கண்ணாடி அப்பா,அம்மாவின்
இளமை,முதுமையையும்
எனது பால்யத்தையும்
தனக்குள் புதைத்துக்கொண்டு
பிரதிபலிப்பதற்கு முகங்கள் ஏதுமற்று
அடர்தியானத்தில் ஆழ்ந்திருக்கிறது

பிரதிபலிப்பதற்கு முகங்களற்று
போகும்போதுதான் புரிகிறது
கண்ணாடியின் துயரம்



Share/Bookmark

20 comments:

ஆனந்த் ராஜ்.P said...

//பிரதிபலிப்பதற்கு முகங்களற்று
போகும்போதுதான் புரிகிறது
கண்ணாடியின் துயரம்// ......
அன்புடன் அணைக்க இதமான வார்த்தைகளை கேக்க இயலாத நேரத்தில் அடி நெஞ்சை பிசையும் ஒரு வலி இருக்குமே அப்படி பட்டதான துயரம் தெறிக்கிறது..!

ஜோதிஜி திருப்பூர் said...

ரொம்ப நாளாச்சு?.

நல்லாயிருக்கு செல்வம்.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

விழியோரம் துளிர்க்கிறது .

என் அப்பாவின் அறையிலும் ஆளுயரக் கண்ணாடி இருந்தது. அப்பாவின் மரணத்திற்கு பிறகு அதை பயன்படுத்த யாருமில்லை.
அந்தக் கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் , அது அப்பாவின் முகத்தைத் தான் பிரதி பலிக்கிறது.

எப்போதாவது வந்தாலும் , கலங்கடித்து விடுகிறீர்கள் திருநா.
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

சி.கருணாகரசு said...

அழுத்தமான... அடர்த்தியான கவிதை...

பாராட்டுக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை
இன்று

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி ஆனந்தராஜ்
நன்றி ஜோதிஜி..இனி தொடர்ந்து எழுதுவேன்
நன்றி சிவா அண்ணா
நன்றி கருணாகரசு
நன்றி ராஜா

குழந்தபையன் said...

appa eppavume manthirkku naerukathil thaan..

congrats nice post..

*my first visit*

Ramani said...

மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
த,ம 1

Vel Kannan said...

கண்ணாடி முகங்கள் மட்டும் காட்டுவதில்லை
என்கிற இந்த கவிதை. மிக அருமையான முக்கியமான கவிதை நண்ப

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி பிரிட்டோ
நன்றி ரமணி சார்
நன்றி வேல்கண்ணன்

ப.செல்வக்குமார் said...

கலக்கல்ங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்தது இங்க. அப்புறம் எப்பவாச்சும் வருவேன். கடைசியா “ ரக்சுக்குட்டி” படிச்சேன். அந்தக் கவிதை ஓரளவுக்குத்தான் பிடிச்சது. ஆனா இது வாய்ப்பே இல்லை. ரொம்ப பிடிச்சிருக்கு. எப்படினு சொல்லத் தெரியல, இருந்தாலும் கலக்கல்!

செல்வம் said...

கண்ணாடிக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு..அழகான கவிதை...

தமிழ் said...

ரொம்ப அழகாக இருக்குது திரு! ஏன் இவ்வளவு நாளா எதுவும் எழுதவில்லை?

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி செல்வக்குமார்
நன்றி செல்வம்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி தமிழ்..இனி தொடர்ந்து எழுதுவேன்

வெண் புரவி said...

//அப்பா,அம்மாவின்
இளமை,முதுமையையும்
எனது பால்யத்தையும்
தனக்குள் புதைத்துக்கொண்டு//
well said.
ஒவ்வொரு வீடு கண்ணாடிக்குள்ளும் ஒவ்வொரு கவிதை இருக்கும் போலிருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் திரு.
படிக்க நாங்கள் இருக்கிறோம்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி அருண் அண்ணா

karthi keyan said...

இதை படிக்கும் பொழுது எங்கள் வீட்டு 'கண்ணாடி ஞாபகம் வருகிறது! அந்த கண்ணாடி என் அம்மாவின் கல்யான சீர் இன்று அது லேசாக உடைந்துதிருந்த போதிலும் அதில் முகம் பார்க்கும் பொழுது ஒரு சந்தோஷம் வருகிறது அது உங்கள் கவிதையில் இருக்கிறது!

cheena (சீனா) said...

அன்பின் திருநாவுக்கரசு பழனிச் சாமி - கவிதை(??) அருமை .பழங்காலக் கண்ணாடி - பெற்றோரின் நினைவாக - பிரதிபலிப்பதற்கு எம்முகமும் இன்றி ஆழ்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் கண்ணாடி -சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment