Friday, January 10, 2014

பாலை



சில நாட்களாக கனவினில்
பெரும் பாலையொன்று
பரந்து, விரிந்து கிடக்கிறது.

கண்கள் செல்லும் திசையெல்லாம்
தகிக்கும் மணல், இரை தேடும்
பாம்பென நெளிந்து ஊர்கிறது
வெப்பம், சுழல் காற்றென சுழன்று
கொதி நீராய் சுடும் மணலை
அள்ளி முகத்தில் தெளிக்கிறது

கண்களில் வழியும் நீரை
உயிர் நாளங்களில் சேகரித்தபடி
அலையும் நான்,உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்திருக்கிறேன்
ரத்தம் தோய்ந்த என் இதயத்தை

முடிவற்றதாய் நீண்டிருந்த பாலை
சட்டென காலடியில் மறைய,
கனவின் குரூரம் தாங்காமல்
பதறியெழுந்த என்னிலிருந்து
சிதறி விழுந்தன சில
மணற் துகள்கள்.

Share/Bookmark